உடன் அகற்றுங்கள் - மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
colombo
boat
fisherman
By Sumithiran
பாணந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக கொச்சிகடை வரையான கடற்கரை பிரதேசத்திலுள்ள அனைத்து மீனவர்களின் படகுகளையும் அகற்றுமாறு மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கு மீன்வளத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
"எக்ஸ்பிறஸ் பேர்ள் " கப்பல் கடலில் மூழ்கக்கூடும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கப்பலில் உள்ள எரிபொருள் மற்றும் எரிந்த இரும்புக் கொள்கலன்கள் உள்ளிட்ட அசுத்தங்கள் கடலில் மிதக்கும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக விழிப்புடன் இருக்க மற்ற பகுதிகளில் உள்ள மீன்பிடி சமூகத்தை எச்சரிக்குமாறு அனைத்து மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கும் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்