குறைந்த விலைக்கு எரிபொருள்: முயற்சியில் இறங்கிய அரசாங்கம்
அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து குறைந்த விலையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, குறித்த முயற்சியானது, மூன்றாம் தரப்பினர் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வதில் ஏற்படும் கூடுதல் செலவுகளைச் சேமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் ஏற்றுமதி
ஐக்கிய அரபு அமீரகம் என்பது உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், அங்கு பொருளாதாரம் பெரும்பாலும் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டது.
அத்தோடு, உலகின் ஏழாவது பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளதுடன், ஒரு நாளைக்கு 3 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறார்கள்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்வதுடன், அவற்றின் முக்கிய வாங்குபவர்களில் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)