இந்தியாவிலிருந்து தரம் குறைந்த மருந்து இறக்குமதி -மருந்தாளர் சங்கம் குற்றச்சாட்டு
Keheliya Rambukwella
Hospitals in Sri Lanka
India
By Sumithiran
இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்படாத மற்றும் தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தைச் சேர்ந்த அஜித் தென்னக்கோன் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
கறுப்புப்பட்டியலில் உள்ள இந்திய மருந்து நிறுவனங்களிடம் இருந்து தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளது.இந்த தவறை சரி செய்யுமாறு அரசை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் கெஹலிய மீது கடும் விமர்சனம்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே இலங்கை சந்தைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு NMRA யினால் அங்கீகரிக்கப்படாத இந்திய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளார்.
எனினும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி