நாட்டிலுள்ள வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல(Ella) - வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகக் குறித்த வீதி கடந்த 14 ஆம் திகதி அதிகாலை முதல் மூடப்பட்டது.
இதனால் அந்த வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல்.உதயகுமார தெரிவித்துள்ளார்.
சாரதிகளுக்காக புதிய திட்டம்
இதேவேளை, கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை, பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கோரிக்கை
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 412 வீதி விபத்துக்களில் 431 பேர் உயிரிழந்துள்ளதுடன் அந்த காலப்பகுதியினுள் நாடளாவிய ரீதியாக 925 பாரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என காவல்துறை கோரியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்