மட்டக்களப்பில் விபத்தில் சிக்கி மௌலவி ஒருவர் பலி
மட்டக்களப்பில் (Batticaloa) விபத்தில் சிக்கி பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (16) காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இடம்பெற்றுள்ளது.
காததான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டு நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்த போது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பிரயாணித்த பேருந்து, கல்லடிபால சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கியில் பிரயாணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மௌலவி சிகிச்சை
இதில் மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து பிரயாணித்த மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, பேருந்து சாரதியை கைது செய்துததுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்