கொழும்பின் சில பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை காவல்துறை பிரிவு மற்றும் கடலோர காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல வீதிகள் இன்று (21.05.2025) காலை 7 மணி முதல் 11:45 வரை இடைக்கிடையே மூடப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெற உள்ள விசேட வழிபாடு மற்றும் ஊர்வலம் காரணமாக அந்தப் பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி முகத்துவாரத்தில் இருந்து புறக்கோட்டை வரை யான வீதியும் கிறிஸ்டி பெரேரா சுற்றுவட்டத்தில் இருந்து கொச்சிக்கடை தேவாலயம் வரையிலான வீதியும் மூடப்படவுள்ளன.
எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, இயன்றளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
