தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
பிரதான மார்க்கத்தில் இன்று (01) 19 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் கரையோர மார்க்கத்தில் 34 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த விடயம் தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடருந்து சேவைகள்
பிரதான தொடருந்து மார்க்கத்தில் காணப்படும் தடைகள் காரணமாக, சம்பந்தப்பட்டதொடருந்துகள் கொழும்பு கோட்டையிலிருந்து எம்புல்தெனிய வரைக்கும், எம்புல்தெனியிலிருந்து கொழும்பு கோட்டை வரைக்கும் மாத்திரமே அந்த தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.

இது தவிர, புத்தளம் மார்க்கத்தில் 18 தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளது
குறித்த தொடருந்து சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், களனிவெளி மார்க்கத்தில் 10 தொடருந்து சேவைகளை இயக்கவும் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |