உடைந்த மாவிலாறு அணை: கிராமங்கள் வெள்ளத்தில் - நூற்றுக்கணக்கான மக்கள் மீட்பு
Sri Lanka Navy
Climate Change
Weather
Floods In Sri Lanka
By Thulsi
திருகோணமலை - மாவிலாறு பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மாவிலாறு குளத்தின் ஒரு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை கடற்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இன்று (01) காலை வேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மூதூர் கல்கந்த விகாரை வளாகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
பேரிடர் நிவாரண நடவடிக்கை
மூதூர் பகுதிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்காக கடற்படையின் தரையிறங்கும் கப்பல் மற்றும் தரையிறங்கும் படகு, கடலோர ரோந்து கப்பல் ஆகியவை தயாராக உள்ளன.

மேலும், கடற்படை இந்த மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்