சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படை வீரர்கள் ஐவரும் பலி
புதிய இணைப்பு
சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை அதிகாரிகள் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று காலை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடற்படை உடனடியாக ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, மேலும் தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
உடல்களையும் மீட்கும் முயற்சி
சம்பவம் நடந்த நேரத்தில், கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய கூறுகையல், இந்த பணியாளர்கள் அப்பகுதியில் செயல்படும் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்ததாக தெரிவித்தார்.

சவாலான வானிலைக்கு மத்தியில் ஐந்து அதிகாரிகளின் உடல்களையும் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலாம் இணைப்பு
சுண்டிக்குளம் சாலை பகுதியில் காணாமல் போன ஐந்து கடற்படையினர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தனர். நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுண்டிக்குளம்,சாலை பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகள் நிரம்பி வழிகின்றது.
வெள்ள அபாயம்
குறித்த பகுதிகளில் கடற்படை முகாம் உட்பட்ட பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது.
வெள்ள நீரை கடலுக்குள் விடும் முயற்சியில் கடந்த வெள்ளிக் கிழமை தொடுவாய் வெட்டுவதற்காக சென்ற சாலை கடற்படை முகாமை சேர்ந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளார்கள்.

காணாமல் போனவர்களை தேடும் பணி இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீட்பு நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் நாளை காணாமல் போன கடற்படை வீரர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17