மன்னாரில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வெளியான தகவல்

Mannar Sri Lanka Climate Change Floods In Sri Lanka
By Independent Writer Nov 30, 2025 10:43 PM GMT
Report
Courtesy: Nayan

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை நிலையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 946 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெருக்கெடுத்த மகாவலி கங்கை: அரசாங்க அதிபரின் அறிவிப்பு

பெருக்கெடுத்த மகாவலி கங்கை: அரசாங்க அதிபரின் அறிவிப்பு

சீரற்ற காலநிலை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 24 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 946 நபர்கள் குறித்த அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 87 முகாம்களில் 11 ஆயிரத்து 230 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 505 நபர்கள் தங்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வெளியான தகவல் | Munnar Floods Affected People Details

தற்போது மன்னார் மாவட்டத்தில் இயல்பான வானிலை காணப்பட்டாலும் மன்னார் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தை இணைக்கும் இரண்டு வீதிகளும் துண்டிக்கப்பட்டு ஏனைய மாவட்டங்களுடன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் - யாழ் பிரதான வீதி (ஏ-32) மற்றும் மன்னார் -மதவாச்சி பிரதான வீதி ஆகிய இரு வீதிகளும் தற்போது பயணம் செய்ய முடியாத நிலையில் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றது.

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு: வெளியான அறிவிப்பு

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு: வெளியான அறிவிப்பு

மீட்கும் நடவடிக்கை

மாவட்டத்தில் உள்ள அதிக அளவான குளங்கள் பெருக் கெடுத்துள்ளதன் காரணமாக மல்வத்து ஓயா, பாலியாறு மற்றும் பறங்கியாறு போன்ற ஆறுகளில் இருந்து அதிக அளவில் நீர் பெறுக்கெடுக்கின்றமையினாலும் பல கிராமங்கள் மூழ்கிய நிலையில் தொடர்புகள் இன்றி காணப்படுகின்றது.

தனித்து விடப்பட்ட சுமார் 250 நபர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேக்கம் தொங்குபாலம் பகுதியில் கடந்த இரு தினங்களாக தவித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உலங்கு வானூர்தி உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வெளியான தகவல் | Munnar Floods Affected People Details

மேலும் கூராய் பகுதியில் உள்ள குளம் பெருக்கெடுத்ததன் காரணமாக 40 நபர்கள் மரங்களிலும் உயர்ந்த கட்டடங்களிலும் தஞ்சமடைந்த நிலையில் நீர் மட்டம் குறைந்த நிலையில் அவர்கள் அப்பகுதியில் உள்ள மண் திட்டியில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்களை மீட்கும் நடவடிக்கை தாமதித்து உள்ளது, அவர்களுக்கான உணவு வழங்கும் நடவடிக்கைகள் கடற்படையூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு...! பலியான உயிர்கள்

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு...! பலியான உயிர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGallery
ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026