நாட்டு மக்களுக்கு எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
announcement
srilankan
gas
By Vanan
எரிவாயுவை நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் எரிவாயு நிறுவனத்தின் 1311 என்ற இலக்கத்தை அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இரவு மாலைதீவில் இருந்து 3900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளதாகவும் அதிலுள்ள எரிவாயுவை தரையிறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதகாவும் தெரிவித்தார்.
இருப்பினும் நாட்டில் பல இடங்களில் எரிவாயுவை பெற மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது .

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி