அதிபர் ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
education
teachers
principal
By Sumithiran
நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 3,800 பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு கல்வி அமைச்சால் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடு தடையாக இருக்காது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பு பிரிவினரினால் எந்த தடையும் ஏற்படமாட்டாது.
ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலை அதிபரின் குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக்கொள்வது போதுமானது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.