சிறுவர்கள் தொடர்பில் பெற்றோரிடம் விடுக்கப்பட்ட முக்கிய வேண்டுகோள்
covid
children
parents
By Jaso
சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் நாற்பது சிறுவர்கள் கொவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். அத்துடன் குறைந்தபட்சம் நான்கு சிறுவர்கள் தினசரி COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்தார்கள், என அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் லுனாவா மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தேவையற்ற பயணங்களில் ஈடுபட சிறுவர்களை வெளியே கொண்டு செல்லவேண்டாம் என்று டொக்டர் விஜேசூரிய பெற்றோர்களை வலியுறுத்தினார்.
திருமணங்கள், இறுதிச் சடங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வேறு எந்த நெரிசலான இடங்களுக்கும் சிறுவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அவர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்