இந்தியாவுக்கு அளிக்கப்படவுள்ள முக்கிய ஆவணங்கள் - வெளிவந்தது கடும் எதிர்ப்பு
ஸ்ரீலங்காவின் தேசிய அடையாள அட்டை சார்ந்த ஆவணத்தரவுகளை இந்தியாவுக்கு அளிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு ஸ்ரீலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கா நீதிமன்றங்களின் ஆவணங்களைக் காப்பு செய்வதற்காக மலேஸிய நிறுவனமொன்றுக்கு வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண (Buddhika Pathirana) தெரிவித்தார்.
லைபீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கேள்விமனு விவகாரத்தில் மோசடி குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்ற இந்தியாவின் நிறுவனமொன்றுக்கு தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை வழங்குவதை பௌத்த புராதன இடமாகிய ருவன்வெலிசேய விகாரைக்கு முன்பாகபதவிப் பிரமாணம் செய்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷ (gotabaya rajapaksha)தடுப்பாரா என்பதை பார்ப்போம்.
அதேபோல இலங்கையிலுள்ள நீதிமன்றப் பதிவுகள் சார்ந்த ஆவணங்களை ஆவணப்படுத்துகின்ற செயற்பாடுகளை மலேஸிய நிறுவனமொன்றுக்கு வழங்கவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. லண்டன் பங்குச் சந்தையின் ஆவணங்களை முறையாக பதிவிட்டுப் பாதுகாத்து வருகின்றது இலங்கையிலுள்ள ஒரு தனியார் நிறுவனமாகும்.
இலங்கையில் திறமையானவர்கள் இல்லையா? ஏன் மொரட்டுவ, கொழும்பு பல்கலைக்கழங்களில் இதற்கான திறமையானவர்கள் பலர் உள்ள நிலையில் இந்தியா மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏன் அப்பணிகளை வழங்க வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்”