அமெரிக்காவுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்!
அமெரிக்கா அனுப்பிய 15 அம்ச முன்மொழிவுக்கு தெஹ்ரான் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும், "நாங்களும் எந்த முன்மொழிவுகளையோ அல்லது நிபந்தனைகளையோ சமர்ப்பிக்கவில்லை" எனவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அமெரிக்காவுடன் நேரடியாகவோ அல்லது பிராந்திய நாடுகள் மூலமாகவோ முக்கிய செய்திகள் பரிமாறப்பட்டுள்ளது என்பதைவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அராக்சி,
“முன்பைப் போலவே, அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் இருந்து நான் நேரடியாக செய்திகளைப் பெறுகிறேன். ஆனால் இதன் அர்த்தம் நாங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம் என்பதல்ல.

இங்கு ஈரானில் உள்ள எந்தவொரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. மேலும் அனைத்து செய்திகளும் வெளியுறவு அமைச்சகம் மூலமாகவே தெரிவிக்கப்படுகின்றன.
குறிப்பாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே தகவல் பரிமாற்றங்களும் நடைபெறுகின்றன. இவ்வாறான நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தங்களுக்கு ஒருபோதும் நல்ல அனுபவம் கிடைத்ததில்லை.
இதன்படி ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறமாட்டோம் என்று உறுதியளிப்பது முதல், அதன் ஏவுகணைக் கையிருப்பைத் தூரம் மற்றும் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் கட்டுப்படுத்துவது வரையிலான முன்மொழிவுகளை அமெரிக்க திட்டம் உள்ளடக்கியிருந்தது.
இருப்பினும், நாங்கள் எதிர்பார்ப்பது போர் நிறுத்தத்தை அல்ல, பிராந்தியத்தில் அனைத்துத் தாக்குதல்களும் முடிவுக்கு வருவதை மாத்திரமே ஈரான் ஏற்கும்” என அரக்சி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்