பிரித்தானியாவில் ஒரே பகுதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அடித்த அதிஷ்டம்
ஒரே நேரத்தில் கொட்டிய பணமழை
பிரித்தானியாவில் ஒரே பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் ஒரே தடவையில் பணமழை கொட்டியதால் அவர்கள் கடும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்.
ஸ்கொட்லாந்திலுள்ள Aberdeen என்னும் இடத்தில் வாழும் 125 பேருக்கே Postcode Lottery என்னும் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பரிசுமழை கிடைத்துள்ளது.
மொத்த பரிசுத்தொகை 3.2 மில்லியன் பவுண்டுகள்
அவர்களுக்குக் கிடைத்த மொத்த பரிசுத்தொகை 3.2 மில்லியன் பவுண்டுகள் ஆகும். அந்த அதிர்ஷ்டசாலிகளில் Alexender Hardingham (83) என்பவருக்கு 730,000 பவுண்டுகளும், Tilly Adams (70) என்னும் பாட்டிக்கு 360,000 பவுண்டுகளும் பரிசு கிடைத்துள்ளது.
Tilly பாட்டிக்கு ஒரு மகனும் ஒரு மகளும், இரண்டு பேரப்பிள்ளைகளும், அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். என் மொத்த பரிசுத் தொகையும் அவர்களுக்குத்தான் என்கிறார் அவர்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டம்
மற்ற 123 பேருக்கும், ஆளுக்கு 13,996 பவுண்டுகள் முதல், 83,976 பவுண்டுகள் வரை பரிசு கிடைத்துள்ளது.
Aberdeen நகரின் ஒரு பகுதியே பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ள நிலையில், பெரும்பாலானோர் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Credit: SWNS