இந்தியாவில் பரவி வரும் கொடிய வைரஸ்: இருவர் உயிரிழப்பு
Kerala
India
World
By Dhilak
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொடிய வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர்கள் இருவரும் நிபா என்னும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிபா என்னும் இந்த வைரஸ் மூளை செல்களை அழித்து, உமிழ்நீருடன் கலந்து கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பரிசோதனை
இந்த வைரஸ் பன்றிகள் மற்றும் வௌவால்கள் மூலம் பரவுவதாகவும், அதற்கான சிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது, அவர்களின் உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்