யாழில் வாளுடன் டிக்டொக் காணொளி வெளியிட்ட இளைஞன் - காவல்துறை எடுத்த துரித நடவடிக்கை
jaffna
arrested
young man
sword
dikdog
By Sumithiran
வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம் நாகம்மா வீதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் சுன்னாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.