தமிழரசுக் கட்சியின் மாநாடு வழக்கில் இரு தரப்பாக பிரிந்த சிறீதரன் - மாவை
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பிலான வழக்கில் கட்சி மீண்டும் இரண்டாக பிளவுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனும் (S.Shritharan), மாவை சேனாதிராஜாவும்(Mavai Senathirajah) வெவ்வேறு சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஒரு நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றோம்
இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா இடையே வெவ்வேறான கருத்து நிலைப்பாடுகள் காணப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
'கட்சியின் சார்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் நான் உள்ளிட்ட மூவர் ஒரு நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றோம்.
மீதமுள்ள 4 பேரும் இரு தரப்பாக பிரிந்து வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டு செயற்படுகின்றனர் எனவும், இதனை மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுத்துரைத்தேன். கட்சியின் முன்னணி அங்கத்தவர்கள் யாப்பை தெரியாதது போல் நடந்துகொள்வது தொடர்பிலும் விளக்கமளித்தேன்." எனவும் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |