குடும்ப தகராறில் மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் - கணவன் தப்பியோட்டம்
Sri Lanka
By pavan
பல்லம ரம்பத்தலாவத்த, அடிகம பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (13) ஞாயிற்றுகிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை

காயமடைந்த பெண் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ரம்பத்தலாவத்தை அடிகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி