யாழில் நிலவும் சீரற்ற காலநிலை: திருப்பி அனுப்பப்பட்ட விமானம் (படங்கள்)
Jaffna
Chennai
Jaffna International Airport
Weather
By Sathangani
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று (13) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பியுள்ளது.
மாற்று ஏற்பாடு
இதேவேளை விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் நேற்று தங்க வைக்கப்பட்டனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்