கொரோனாவுக்கு இலக்காகும் சிறுவர்களது தொகை அதிகரிப்பு! பெற்றோரே அவதானம்
நாட்டில் சிறுவர்களுக்கு கொவிட் தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளிவந்துள்ளது.
இதனால், சிறுவர்களுக்கு கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பு சீமாட்டி லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் மாத்திரம் கொவிட் தொற்றுறுதியான 31 சிறுவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாத ஆரம்பத்தில் குறித்த வைத்தியசாலையில் கொவிட் தொற்றுறுதியான 4 சிறுவர்கள் மாத்திரமே சிகிச்சை பெற்றிருந்தனர். எனினும் குறித்த எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது.
இதுபோலவே, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கொரோனா தடுப்பு மையங்களிலும் பல சிறுவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
எனவே, சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பும் போதும், வேறு இடங்களுக்கு அனுப்பும் போதும் பெற்றோர் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு சுகாதார தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.