இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கடன் அட்டைகளின் பாவனை
இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது.
இது 0.1 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன் அட்டைகள் 0.6 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
கடன் அட்டை பாவனை
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், கடந்த (2024) நவம்பர் மாதம் 19 இலட்சத்து 51, 654 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு டிசம்பர் மாதம் 19 இலட்சத்து 70,130 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், 2023ஆம் ஆண்டு டிசம்பரில் பதிவான கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,917,085 ஆக காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடனட்டைகளின் பயன்பாடு, வளர்ச்சி போக்கைக் காண்பித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
