விவசாயிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவல் : உரங்களின் விலையும் அதிகரிக்கிறது
நேற்றையதினம் (01) மண்எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது உரங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் உர விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்தார்.
ஒரு மெட்ரிக் தொன் யூரியா முன்பு சுமார் 425 அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது அது 450 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
உரப் பற்றாக்குறை இல்லை
நாட்டில் உரப் பற்றாக்குறை இல்லை என்றும், சிறுபோகத்திற்கான யூரியா உரத்தின் தேவை சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மெட்ரிக் தொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், கடந்த மார்ச் மாதத்திலிருந்து சுமார் 15,000 மெட்ரிக் தொன்ன்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பருவத்திற்கு சுமார் 20,000 மெட்ரிக் தொன்ன் உரம் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 7,000 மெட்ரிக் தொன்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வந்தடைந்த யூரியா
கடந்த வாரத்தில் சுமார் 21,000 மெட்ரிக் தொன் யூரியா துறைமுகத்தை அடைந்துள்ளதாகவும், இந்தப் பங்குகள் உர நிறுவனங்கள் மூலம் சந்தைக்கு வெளியிடப்பட்டதாகவும், சுமார் 16,000 மெட்ரிக் தொன் யூரியாவும் சுமார் 27,000 மெட்ரிக் தொன் பொட்டாஷ் உரமும் உர களஞ்சியசாலைகளில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
