உர மானியத்தை அதிகரிக்க தீர்மானம்: வெளியான முக்கிய தகவல்
Sri Lanka Upcountry People
Mahinda Amaraweera
Sri Lanka
By Shalini Balachandran
தேயிலை தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை விவசாய அமைச்சில் இன்று(9) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இந்த உர மானியத்தை பத்து ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேயிலை உற்பத்தியாளர்கள்
இதுவரை 10 ஏக்கருக்கு மாத்திரமே குறித்த உர மானியம் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதனை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தேயிலை சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்