நாட்டில் உச்சம் தொடும் தேங்காய் விலை
இந்த ஆண்டு (2025) ஜனவரி மாத இறுதி வாரத்தில், 2024 ஜனவரி மாத இறுதி வாரத்துடன் ஒப்பிடும்போது, ஒரு தேங்காயின் சில்லறை விலை 88 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த நாட்களில், ஒரு பெரிய தேங்காய் ரூ.200 முதல் 250 வரையிலும், ஒரு சிறிய தேங்காய் ரூ.170 முதல் 190 வரையிலும் விற்கப்படுதாகவும் குறித்த நிருவனம் தெரிவித்துள்ளது.
தேங்காயின் சில்லறை விலை
கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பெரிய தேங்காயின் சில்லறை விலை 78 சதவீதத்தாலும், சிறிய தேங்காயின் விலை 88 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள வாராந்த உணவுப் பொருட்கள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்துடன் ஒப்பிடும்போது, ஒரு தேங்காயின் மொத்த விலை சுமார் 110 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , 2024 ஆம் ஆண்டு 3,300 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2,600 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இதுவே இலங்கையில் தேங்காய் விலை உயர்விற்கு காரணம் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க (Chaturanga Abeysinghe) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)