மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி - மற்றுமொரு கட்டணமும் அதிகரிக்கிறது
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் எகிறி வருகின்றன.
குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நாளாந்தம் தொழில்செய்து பிழைப்பவர்கள் முதல் அரச மற்றும் தனியார் துறையினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கமும் தான் வழங்கும் சேவைக்கட்டணங்களையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முக்கிய பயன்பாடான எரிபொருள் விலை குறுகிய காலத்தில் மூன்று தடவை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 30 அலகிற்கு மேல் நீரை பயன்படுத்துபவர்களின் நீர் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.