இரட்டிப்பாக்கப்படும் விவசாயிகளின் வருமானம்: ஜனாதிபதி வேட்பாளர் உறுதி
இரண்டு பருவங்களுக்குள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி விவசாய தொழில்முனைவோரை உருவாக்கும் நடைமுறை வேலைத்திட்டம் தனது மூலோபாயத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) குறிப்பிட்டுள்ளார்.
கந்தளாய் பிரதேசத்தில் நேற்று(10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
'திலித் கமட' தொகுதிக் கூட்டத்தின் மற்றுமொரு பொதுக்கூட்டம் கந்தளாயில் ஜனாதிபதி வேட்பாளரான தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்றது.
வருமானம்
அதன் போது, திலித் ஜயவீர,"இந்த நாட்டு மக்களின் விவசாய வாழ்க்கையை எப்படி மாற்றுவது என்பதை நாங்கள் காட்டியுள்ளோம்.

பாரம்பரிய விவசாயிக்கு பதிலாக விவசாய தொழில்முனைவோரை எப்படி உருவாக்குவது என்பதை நாங்கள் தெளிவாகக் காட்டியுள்ளோம்.
இரண்டு பருவங்களுக்குள் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும் என்பதை என்னால் பொறுப்புடன் சொல்ல முடியும். அது எப்படி என்பது எங்கள் மூலோபாய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்