அதிகரித்தது கொரோனா -நெதர்லாந்தில் முடக்கநிலை அமுல்
நெதர்லாந்தில் இன்று மாலையில் இருந்து மூன்று வாரகாலத்துக்குரிய கொரோனா முடக்கநிலையும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை பேணும் கட்டுப்பாடுகளும் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன.
நேற்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூத்தே அறிவித்த புதிய நடைமுறைகளின் படி வணிக நிறுவனங்கள் இன்று மாலை 6 மணிக்கு மூடப்பட்ட அதேவேளை உணவகங்கள் யாவும் இரவு 8 மணிக்கு மூடப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் மீண்டும் மேற்கு ஐரோப்பாவின் இந்த ஆண்டுக்கான குளிர்காலத்தின் முதலாவது கொரோனா முடக்கநிலை நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் வணிகநிலையங்கள் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் உணவுவழங்கும் சேவை நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
நெதர்லாந்தின் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்த மூன்று வார பகுதி முடக்கம் அவசியமானது என பிரதமர் மார்க் ரூத்தே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த முடக்கநிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஹேக்கில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.