அதிகரிக்கப்பட்டுள்ள முட்டை விலை !
Economy of Sri Lanka
Money
Egg
By Shalini Balachandran
சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், முட்டை ஒன்றின் விலை 55 தொடக்கம் 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட விலை
சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தைக்கு அதிகளவு முட்டை உற்பத்தி வருவதால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்த போதிலும் மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி