வெளிநாட்டுப் பிரஜைகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
Colombo
Pakistan
Iran
Law and Order
By Laksi
வெளிநாட்டுப் பிரஜைகள் இருவருக்கு இலங்கையில் (Sri Lanka) ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை கொழும்பு (Colombo) மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்திகே விதித்துள்ளார்.
பாகிஸ்தான் (Pakistan) மற்றும் ஈரான் (Iran) நாட்டுப் பிரஜைகளுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை
குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்பரப்பிற்கு சொந்தமான சர்வதேச கடல் எல்லையில் வைத்து வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்...பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு: கஜேந்திரன் சந்தேகம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்