அதிகரிக்கும் பயணக் கட்டணங்கள் - புதிய விபரங்கள் இதோ!!
bus
Increasing
fares
By Vanan
நாளை மறுதினம் (05) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் இன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளன.
பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த 29 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய பேருந்து பயண கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண அதிகரிப்பு தொடர்பிலான விசேட அறிவிப்பு அடங்கிய ஆவணங்கள், பயணிகள், பேருந்துகளின் உரிமையாளர்கள், பேருந்து ஊழியர்கள் என அனைத்து தரப்பிற்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாகவே இந்தக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி