இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
புதிய இணைப்பு
172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றிஎன்ற இலக்குடன் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக ஜோஸ் பட்லர் - பில் சால்ட் களமிறங்கினர். ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிறிது நேரத்தில் சால்ட்டும்(5) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக மொயீன் அலி(8), பேர்ஸ்டோவ்(0), சாம் கரன்(2) ஹாரி புரூக்(25) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
லிவிங்ஸ்டன் 11ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டது. இதேவேளை, இறுதிப்போட்டியில் தென் ஆபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துடன் சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட்டும் (4) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் ரோகித்துடன் சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின்புள்ளியை உயர்த்தினர். நடுவே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது.
மீண்டும் போட்டி ஆரம்பம்
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அரைசதம் அடித்த நிலையில், 57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் ஆட்டமிழந்தார்.
ஹர்திக் 23 ஓட்டங்கள் எடுத்தார். சிவம் துபே டக் அவுட்டானார். அக்சர் படேல் 10 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஜடேஜா 17 ஓட்டங்ளுடனும், அர்ஸ்தீப் சிங் ஒரு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி துடுப்பாடவுள்ளது.
முதலாம் இணைப்பு
நடப்பு ரி20 உலகக்கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் வாய்ப்பை தக்கவைக்கும் அணிக்கான சவால் மிக்க ஒரு போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் ஆஃப்கான்(Afghanistan) அணியை வீழ்த்திய தென்னாபிரிக்க(South Africa) தனது கிரிக்கட் வரலாறில் ஒரு மைல் கல்லை தொட்டுள்ள நிலையில் இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு நுழையும் அணி இந்தியாவா இங்கிலாந்தா(England) என்பதை இன்றைய போட்டி தீர்மானிக்க உள்ளது.
உலகக் கிண்ண அங்குரார்ப்பண வரலாற்றில் எம். எஸ். தோனி தலைமையில் சம்பியனான இந்தியா(India), 17 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ணத்தை இரண்டாவது தடவையாக சுவீகரிக்கும் முனைப்புடன் இம்முறை களம் இறங்கியுள்ளது.
இந்திய அணி
மறுமுனையில் 2010இலும் 2022இலும் உலக சம்பியனான இங்கிலாந்து, மூன்றாவது முறையாகவும் கோப்பையை சுவிகரிக்கும் பாதையில் களமிறங்கியுள்ளது இந்த இரண்டு அணிகளும் கடைசியாக ரி20 உலகக் கிண்ண அரையிறுதியில் இந்தியா நிர்ணயித்த 169 என்ற இலக்கை விக்கட் இழப்பின்றி கடந்து சாதனை படைத்தது.
ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் 4 சந்தர்ப்பங்களில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.
அவற்றில் இரண்டு அணிகளும் இந்தியா (2007), இங்கிலாந்து (2009), இந்தியா (2012), இங்கிலாந்து (2022) என மாறிமாறி வெற்றிபெற்று தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் காணப்படுகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றி
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிகொண்ட இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இது இங்கிலாந்துக்கு சாதகமாக கருதப்படுகின்றது. காரணம் குறித்த போட்டிக்கு முன்னர் மழை குறிக்கிட்டதால் போட்டி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் இதனை சாதகமாக பயன்படுத்தவே இங்கிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
எனினும் இந்தியாவின் அதிரடி துடுப்பாட்டம் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சவால் விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இதன்படி இன்றைய போட்டியில் இரு அணிகளின் சார்பில் இங்கிலாந்து: பில் சோல்ட், ஜோஸ் பட்லர் (தலைவர்), மொயீன் அலி, ஜொனி பெயாஸ்டோவ், ஹெரி ப்றூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜொவ்ரா ஆச்சர், ஆதில் ரஷித், மாக் வூட், ரிஸ் டொப்லே. இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா. ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |