இந்திய அரசின் புதிய இராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து கடும் வன்முறை வெடிப்பு:ரயில்கள் எரிப்பு

BJP Narendra Modi India
By Steephen Jun 17, 2022 09:43 AM GMT
Report

இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அக்னி பாதை என்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பிஹார், உத்தரப் பிரதேச, தெலங்கானா மாநிலங்களில் பெரும் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.

மேற்படி மாநிலங்களில் ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் இந்தியா முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. தெலங்கானா ரயில் நிலையத்தில் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

8 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெலங்கானா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய தடியடி, கண்ணீர் புகை குண்டு தாக்குதல் என்பன பலனளிக்காத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக இந்திய ரயில்வே துறையினர் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிஹாரில் துணை முதல்வர் ரேணு தேவியின் வீடு தாக்கப்பட்டுள்ளது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.

இதுபோன்ற வன்முறைகள் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது எனவும் போராட்டக்காரர்கள் இது சமூகத்திற்கான இழப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ரேணு தேவி தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை, விமான படை ஆகியவற்று படையினரை தெரிவு செய்யும் அக்னி பாதை என்ற புதிய திட்டத்துக்கு இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினர் வை.கோ.,

இந்திய அரசின் புதிய இராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து கடும் வன்முறை வெடிப்பு:ரயில்கள் எரிப்பு | India Agnipath Army Recruitment Scheme

இது தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பின்னர் தூக்கி எறியும் நடைமுறை போன்று எனவும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்திய படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழஙகாமல் 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை எனவும் கூறியுள்ளார்.

இராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்துவிடும். இந்திய இராணுவத்தை காவி மயம் ஆக்கவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்துவதற்கான மறைமுக திட்டமே அக்னி பாதை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை இந்திய ஒன்றிய அரசாங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் எனவும் வை.கோ கூறியுள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி