இலங்கைக்கு கைகொடுக்க இந்தியா முன்வரவு
India
Sri Lanka
provide
approve
$ 500 million
By Vanan
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சனைக்கு உதவுவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
அந்த வகையில் 500 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க, இந்திய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் வழங்கப்படும் டொலர் மூலம் மின் தடையை நீக்க முடியும் எனவும், மார்ச் மாதம் வரைக்கான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
