சிறிலங்கா விரைகிறது இந்திய இராணுவ படை
visit
sri lanka
army
indian
By Vanan
இந்திய இராணுவ குழுவினர் சிறிலங்காவுக்கு திடீரென பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது குறித்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இருதரப்பு பாதுகாப்பு, ஒத்துழைப்பு பற்றிய பேச்சு நடத்துவதற்காக இந்திய இராணுவத்தின் பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவு ரீதியான பேச்சு, பயிற்சி முகாம் மற்றும் பாதுகாப்பு பற்றிய விடயங்கள் பேசப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.