நைஜரில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வேண்டுகோள்!
நைஜரில் உள்ள இந்தியர்களை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி இந்திய மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததனால், உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு நைஜர் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு வேண்டுகோள்

இதனாலேயே தற்போது நைஜரில் உள்ள இந்தியர்களை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது, அங்கு இருக்கும் சுமார் 250 இற்கும் அதிகமான இந்தியர்களை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்“ என்று கூறினார்.