இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியா வழங்கவுள்ள முக்கிய திட்டம்
பெருந்தோட்டச் சமூகத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக இந்திய ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படவுள்ள 60 ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம், இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்தா வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்துக்கான இறுதி அனுமதியை எதிர்வரும் வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் வழங்க இந்திய தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் ரோஷ்னி தொம்சன் உள்ளிட்ட இந்தியப் பிரதிநிதிகள் குழுவினருக்கும் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் அனுமதி
இதன்போது, குறித்த திட்டத்திற்குத் தேவையான இந்திய வெளிவிவகார அமைச்சின் அனுமதியை விரைவாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரோஷ்னி தொம்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், தோட்டப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் இந்த 60 ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |