ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் இந்தியா...!
உலக நாடுகள் தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, இராணுவங்களையும் ஆயுதங்களையும் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் உலகநாடுகள் போட்டியிட்டு அதிக ஆயுதங்களையும் இராணுவ தளவாடங்களையும் இறக்குமதி செய்து வருகின்றன.
அப்படி, இராணுவ தளவாட இறக்குமதி செய்வதில் இந்தியா தொடர்ந்து முதல் இடம் வகித்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயுத இறக்குமதி
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8% ஆக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் 2-ம் இடத்தில் சவுதி அரேபியா (8.4%), கத்தார்(7.6%), உக்ரைன் (4.9%), பாகிஸ்தான் (4.3%), ஜப்பான் (4.1%),எகிப்து (4%), அவுஸ்திரேலியா (3.7%), தென்கொரியா (3.1%), சீனா (2.9%) உள்ளன.
அதிகபட்சமான ஆயுதங்கள்
இந்நிலையில், அதிகபட்சமான ஆயுதங்கள் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, அதன்படி 36% ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.
மேலும், பிரான்ஸிடமிருந்து 33%,அமெரிக்காவிடமிருந்து 13% என ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது, இது 2018-2022 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் இறக்குமதி உலக மொத்த ஆயுத விற்பனையில் 11 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |