சீனாவை பின்தள்ள காத்திருக்கும் இந்தியா-ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை
இவ்வருடத்திற்கான (2022) உலக மக்கள் தொகை கணிப்பு விபரத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
இவ்வருடம் எதிர்வரும் 15 ஆம் திகதி உலக மக்கள் தொகை 8பில்லியனை எட்டும் நாளாக கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
மேலும், 1950 ஆம் ஆண்டிலிருந்து உலக மக்கள் தொகை அதன் மெதுவான விகிதத்தில் வளர்ந்து வருவதாகவும், 2020 இல் இந்த வளர்ச்சி வீதம் ஒரு சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சீனாவை மிஞ்சும் இந்தியா

கருவுறுதல் கடந்த தசாப்தங்களில் பல நாடுகளில் குறிப்பிடதக்க அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் இவ் அறிக்கை முலம் குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் உலகில் அதிக மக்கள் கொண்ட நாடான சீனாவை இந்தியா மிஞ்சும் போக்கில் காணப்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது.
கொவிட்-19 தொற்றுநோயானது மக்கள்தொகை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் 2021 இல் உலகளாவிய ஆயுட்காலம் 71 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது (2019 இல் 72.9 இல் இருந்து). எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில நாடுகளில், தொற்றுநோயின் தொடர்ச்சியான அலைகள், குறுகிய கால கர்ப்பம் என்பன பிறப்புகளின்
எண்ணிக்கையில் குறைவினை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.