ஐ.பி.எல் 2024 : பயிற்சிகளை ஆரம்பித்த தோனி!
சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.
அவர் பயிற்சிகளை மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி இணைந்த போது, அவருக்கு ஆதரவாக இருந்த நண்பரின் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடையின் பெயரை இந்த பயிற்சிகளின் போது அவர் தனித்துவமான வகையில் விளம்பரப்படுத்தியுள்ளார்.
ஐ.பி.எல் பயிற்சிகள்
இந்த நிலையில், மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஏனைய வீரர்கள் விரைவில் பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள் என அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
தோனியின் கடைசி ஆட்டத்தொடர்
தோனியின் கடைசி ஆட்டத்தொடராக இந்த ஆண்டில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகள் அமையலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை அவர் இதுவரை மேற்கொள்ளவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |