நிவாரண பணிகளுக்காக மற்றுமொரு உலங்கு வானூர்தியை அனுப்பியது இந்தியா
India
Floods In Sri Lanka
Cyclone Ditwah
By Sumithiran
டித்வா சூறாவளியைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவிலிருந்து ஒரு MI-17 உலங்குவானூர்தி இன்று(09) கட்டுநாயக்காவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்திற்கு வருகை தந்தது.
பராமரிப்புக்காக இரண்டு MI-17 உலங்குவானூர்திகள் இந்தியாவுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து இந்த பணி நிறுத்தப்பட்டது.அந்த உலங்குவானூர்திகள் 270 பேரை மீட்டு சுமார் 50 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை வழங்கின.
புதிதாக வந்த உலங்குவானூர்தி
புதிதாக வந்த உலங்குவானூர்தி, 14 பேர் கொண்ட இந்திய விமானப்படை குழு, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தொடர்ந்து உதவுவதற்காக சிறிலங்கா விமானப்படைபணியாளர்களுடன் இணைந்து செயல்படும்.

நாட்டின் ஒட்டுமொத்த நிலைமை மேம்பட்டுள்ளதால், நிவாரண முயற்சிகளை ஆதரிக்க இந்த உலங்குவானூர்தி போதுமானது என்று இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |