இந்தியாவிற்கு திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!
புதிய இணைப்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (04) காலை இலங்கைக்கு வந்திருந்த அவர், ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருடனான சந்திப்பை நிறைவு செய்து நேற்று மாலை 6.15 அளவில் இந்தியா நோக்கிச் சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜத ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
A productive day visit to Sri Lanka.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 4, 2024
Watch the highlights 🎥:#NeighbourhoodFirst
🇮🇳 🇱🇰 pic.twitter.com/ezZZySYs1E
நான்காம் இணைப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர், சஜித் பிரேமதாச ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள செய்தியில், பிராந்திய அபிவிருத்திக்கான எமது பரஸ்பர நலன்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இந்தியாவின் பூரண ஆதரவை எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
Great to meet @DrSJaishankar during his visit to Sri Lanka. As he often says, ‘A strong and prosperous neighborhood is in everyone’s interest.’ We look forward to India’s continued fullest support in advancing Sri Lanka’s stability and growth, while supporting our mutual… pic.twitter.com/AJViMWhGvB
— Sajith Premadasa (@sajithpremadasa) October 4, 2024
முன்றாம் இணைப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Honored to call on President @anuradisanayake today in Colombo. Conveyed warm greetings of President Droupadi Murmu and PM @narendramodi.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 4, 2024
Appreciate his warm sentiments and guidance for the 🇮🇳 🇱🇰 relations. Discussed ways to deepen ongoing cooperation and strengthen India-Sri… pic.twitter.com/bDIpaiT4te
இரண்டாம் இணைப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் (S. Jaishankar) இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை (Vijitha Herath) வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
பரஸ்பரம் இரு தரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்து இரு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் (Indian External Affairs Minister) எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கருடன் (S. Jaishankar) இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் வருகை வருகை தந்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (anura kumara dissanayaka) மற்றும் பிரதமரை சந்தித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையின் சிறுபான்மை தமிழர்
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Good to be in Colombo again. Look forward to my engagements with the Sri Lankan leadership today.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 4, 2024
🇮🇳 🇱🇰 #NeighbourhoodFirst pic.twitter.com/XJ1YAC9Jff
இந்திய முதலீடுகள், பிராந்திய பாதுகாப்பு, இலங்கையின் சிறுபான்மை தமிழர் தொடர்பான அணுகுமுறை குறித்த அனுரகுமாரதிசநாயக்கவின் நிலைப்பாட்டை புதுடில்லி கேட்டறிவதற்கான வாய்ப்பாக இந்த விஜயம் காணப்படும்.
இந்தியாவின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை மற்றும் சாகர் கொள்கைகளின் அடிப்படையில் இந்த விஜயம் பரஸ்பர நன்மைக்காக நீண்ட ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் இரு தரப்புகளினதும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதன் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |