இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்ட அறிக்கை..! வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்குமெனவும் இலங்கைக்கு அனைத்து சாதகமான வழிகளிலும் இந்திய அரசாங்கம் செயற்படும் எனவும் இந்தியா அறிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்
இதற்கமைய இலங்கையின் அனைத்து முக்கியமான பொருளாதார துறைககளிலும் நீண்ட கால முதலீடுகளை இந்தியா மேற்கொள்வதோடு அதற்கான சந்தர்ப்பங்களையும் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்தியா இனி நிதி உதவி வழங்காது என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா கடந்த சில மாதங்களில் 04 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியினை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதனை நினைவுகூற விரும்புவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
