இந்தியா தலைமைதாங்க மேற்குலக நாடுகள் கண்காணிக்கவேண்டும் - ரணிலின் தீர்வு பேச்சுக்கு முன் அழுத்தம்

TNA Ranil Wickremesinghe Selvam Adaikkalanathan Ethnic Problem of Sri Lanka
By Vanan Dec 12, 2022 05:36 PM GMT
Report

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை முறையாக தொடரவேண்டுமானால், பேச்சுவார்த்தைக்கு இந்தியா தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் மேற்பார்வை அவசியம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

5 தமிழ் கட்சிகளின் தீர்மானங்கள்

இந்தியா தலைமைதாங்க மேற்குலக நாடுகள் கண்காணிக்கவேண்டும் - ரணிலின் தீர்வு பேச்சுக்கு முன் அழுத்தம் | India Leads Pressure Ranil Sri Lanka Ethnic Issue

இதன்போது மேலும் கருத்த தெரிவித்த அவர், “5 தமிழ் கட்சிகள் சம்பந்தர் தலைமையில் கூடி சில தீர்மானங்களை அதிபருக்கு அனுப்பியிருந்தோம். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம்.

நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு ஏற்கனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீள ஒப்படைக்கப்படவேண்டும் எனவும், அதிகார பகிர்வு சம்பந்தமாக அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையையும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும், இந்த ஒழுங்கு முறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதையும் நாம் வரவேற்கின்றோம் என்ற கோரிக்கைகள் அடங்கிய செய்தியை அதிபரிடம் நாம் தெரிவித்திருந்தோம்.

இந்த அடிப்படையிலேயே நாம் பேசலாம் என்று இருக்கும் அதேநேரம், இந்தக் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும் எனவும் கூறியிருக்கின்றோம்.

அதைவிட சட்டத்தில் உள்ள மாகாணசபை முறைமை அதிகாரங்களோடு பகிரப்படும்போது தான் எங்களுக்கு தற்போது உள்ள பிரச்சினைகளை நிறுத்த முடியும் என்ற அடிப்படையில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் உள்ள சகல அதிகாரங்களோடும் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.

இனப்பிரச்சினை தொடர்பாக மகிந்த கலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது.

நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரப்பட்டாலும் முன்னாள் அதிபர் மைத்திரிக்கும் அப்போதைய பிரதமர் ரணிலுக்கும் பிரச்சினை வந்ததால் தட்டிக்கழிக்கும் முனைப்பு இருந்தது.

உலக நாடுகளின் அழுத்தமா?

இந்தியா தலைமைதாங்க மேற்குலக நாடுகள் கண்காணிக்கவேண்டும் - ரணிலின் தீர்வு பேச்சுக்கு முன் அழுத்தம் | India Leads Pressure Ranil Sri Lanka Ethnic Issue

தற்போதும் இந்தப் பேச்சுவார்த்தை ஐ. நா சபையின் தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம் அல்லது பொருளாதார பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இதனைக் காரணம் காட்ட இந்தப் பேச்சு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

இருந்தாலும் பேச்சுக்கு சென்று எமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம்.

இல்லாவிட்டால் நாம் அவர்கள் கேட்பதைக் கொடுக்க இருந்தோம் அவர்கள் பேச்சுக்கு வராததால் எம்மால் எதனையும் செய்ய முடியவில்லை என நல்ல பெயரை எடுக்கும் சந்தர்ப்பமும் அரசாங்கத்திற்கு உள்ளது.

இதுவரை காலம் அரசாங்கங்களோடு இனப்பிரச்சினை விடயத்தை பேசி வந்து நாம் ஏமாற்றப்பட்டவர்கள். இந்தப் பேச்சுவார்த்தை தொடருமாக இருந்தால் இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை இருக்க வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும்.

இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த விட முடியாது” - என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015