மோடியின் அமெரிக்க பயணம் ; பாதுகாப்பு ஆயுதம் பெறுவதா - குழப்பத்தில் சீனா
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
இன்றையதினம் அவர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்பளிக்கவுள்ளனர்.
அதேசமயத்தில் வருகின்ற 22 ஆம் திகதி பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனா
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
மோடியின் அமெரிக்க பயணம் குறித்து இந்திய மற்றும் தெற்காசியாவின் வருங்காலத்திற்கான திட்ட ஆரம்பத்திற்கான ஆராய்ச்சி இயக்குநர் அபர்ணா பாண்டேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
"இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை சீனா உன்னிப்பாக கவனிக்கும்.
ஏனெனில், அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவை பேணும்போது, அது பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பெறுவது மட்டுமின்றி, தற்போது பயன்படுத்தி வரும் ஆளில்லா விமானங்கள் உட்பட பாதுகாப்பு ஆயுதங்களையும் பெறுவதற்கு வழிவகை செய்யும்.
அவற்றை கடற்பகுதிகளில் பயன்படுத்த கூடும் என கூறியுள்ளார்.
ரஷ்யா
இதேபோன்று ரஷ்யாவும், இந்திய பிரதமரின் அமெரிக்க பயணத்தை உன்னிப்பாக கவனிக்கும்.
ஏனெனில், இந்தியாவின் மிகப் பெரிய பாதுகாப்பு ஆயுதங்களையும் விநியோகிக்கும் பாரம்பரிய நாடாக ரஷ்யா உள்ளது.
இந்த இரு நாடுகளையும் தவிர்ந்து, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் இந்தியாவின் நடவடிக்கைகளை கவனிக்கக் கூடும்.
அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவை பேணும்போது அது அந்நாடுகள் அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்." என கூறியுள்ளார்.
