இந்தியாவிடம் கடன் வாங்கியா மாகாணசபைத் தேர்தல்?? அமைச்சர் வெளியிட்ட தகவல்
Election
Press Meeting
SriLanka
Dullas Alakaperuma
By Chanakyan
தேர்தல் முறைமைகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும (Dullas Alakaperuma) தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் இந்த ஆண்டில் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை மேற்கொள்வது சாத்தியமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான இந்தியாவின் கடன் திட்டத்திற்கும் மாகாணசபைத் தேர்தல்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.