இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியாவின் ஐ.என்.எஸ் தரங்கினி
Sri Lanka
India
By H. A. Roshan
இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ் தரங்கினி நாளை நாட்டுக்கு வருகைதரவுள்ளது.
பெப்ரவரி 27 ஆம் திகதியான நாளை முதல் மார்ச் 02 வரை திருகோணமலை துறைமுகத்தில் கடற்படைசார் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.
மேலும், இந்தக் கப்பல் மார்ச் 6 கொழும்புக்கு வருகைதரவுள்ளதோடு 9 ஆம் திகதி வரை அங்கு தரித்து நிற்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை பயிற்சி
துறைமுகம் மற்றும் கடல் சார் விடயங்களின் இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் படகோட்டம் பயிற்சி அளிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

கடற்படை தளபதி நிதின் கஜ்ஜரால் கட்டளையிடப்பட்ட இந்தக் கப்பல், சர்வதேச கடற்படை மதிப்பாய்வு 2026 இல் பங்கேற்ற பிறகு விசாகப்பட்டினத்திலிருந்து திரும்பும் பாதையில் உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
