ஈழத் தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம் : நம்பி நம்பி ஏமாறும் தமிழர்கள்
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு பக்கத்தை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக இருந்து வரும் நிலையில் அதற்கான பரிகாரத்தை தேட வேண்டிய இந்தியா அதற்கு பதிலாக தொடர்ந்தும் பாவத்தை இழைத்து வருகிறது.
கனடாவில் (Canada) அகதியாகப்போன ஈழத்தமிழர் அமைச்சராக இருக்கிறார் பிரித்தானியாவில் (United Kingdom) அகதியாகபோன பெற்றோரின் பிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் அவுஸ்ரேலியாவில் அகதியாக போனவர் நாடாளுமன்ற உறுப்பினர்.
ஆனால் இந்தியாவிற்கு (India) அகதியாகபோனவர்ள் மட்டும் 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்ட அவலம்.
இந்த நிலையில் இந்த நாடு தர்மச்சத்திரம் அல்ல உங்களை எல்லாம் வைத்திருக்க என்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு.
இந்ந வேளையில் ஒரு கேள்வியிருக்கிறது இந்திய இராணுவம் அமைதிப்படை என வந்து ஈழத்தில் அட்டூழியங்களை புரியாமால. இருந்திருந்தால் இறுதிப்போரின் போது அழிவு ஆயுதங்களையும் படைகளையும் களமிறக்காமல் இருந்திருந்தால் இன்று உலகம் பூராகவும் ஈழத்தமிழர்கள் அகதியாக அலையவேண்டிய நிலை வந்திருக்காதல்லவா.
இது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
