சீனாவில் வைத்து ஒப்பந்தமான சிறிலங்கா: நேரில் சென்று கைச்சாத்திட்ட ரணில்(படங்கள்)
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிக ஆபத்துள்ள தொலைபேசி தொடர்பாடல் நிறுவனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சீனாவின் குவாவி நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் சீனாவில் வைத்து ஒப்பந்தம் ஒன்றைசெய்துள்ளது.
இலங்கையில் உள்ள பாடசாலைகளை டிஜிட்டல் எனப்படும் எண்ணியல் மயப்படுத்துவதற்கான சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முன்னணியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவுக்கான விஜயம்
சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, நேற்று பெய்ஜிங்கில் உள்ள குவாவே நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்குச் சென்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
இலங்கையின் பல பல்கலைக்கழகங்களுடன் ஏற்கனவே தமது நிறுவனம் ஒத்துழைப்பை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள குறித்த நிறுவனத்தின் உயர் அதிகாரி இலங்கையில் கல்விசார் உதவிகள் மட்டுமன்றி தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதிலும் தமது நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் எண்ணியல் கல்விமுறை மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்திக்கு ஆதரவளிப்பதில் சீன அரசாங்கம் மற்றும் குவாவே ஆகிய நிறுவனங்களின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.
YOU MAY LIKE THIS